» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடன் கேட்ட நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: குடிபோதையில் வெறிச்செயல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:47:35 AM (IST)
நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், நண்பனின் முகத்தைக் கல்லால் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பெருமாள்புரம் தாமஸ் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ஜோசப் ராஜா (30), ஒரு கட்டிடத் தொழிலாளி. இவரும், தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி (31) என்பவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகக் கட்டிட வேலைக்குச் சென்று வந்தனர்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலை முடிந்து திரும்பிய இருவரும், இரவு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, ஜோசப் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடசாமியிடம் வாங்கியிருந்த ரூ. 7,000 கடனைத் திருப்பித் தருமாறு மாடசாமி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த மாடசாமி, ஆத்திரத்தில் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து ஜோசப் ராஜாவைத் தாக்கியுள்ளார்.
இதில் ஜோசப் ராஜா நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அவரது முகத்தில் கல்லால் மீண்டும் மீண்டும் தாக்கிச் சிதைத்துள்ளார். மேலும், அவரது கழுத்தைத் துண்டால் இறுக்கியும், காலால் மிதித்தும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் புதிய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்திற்குச் சென்ற மாடசாமி, தான் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முகம் சிதைந்த நிலையில் கிடந்த ஜோசப் ராஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாடசாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களுக்கிடையே பணத் தகராறில் நடந்த இந்த விபரீதக் கொலைச் சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பறக்கும் படை சோதனைகள் தீவிரம்: தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:09:14 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)

வீடியோ காலில் கணவருடன் பேசிக்கொண்டிருந்த சின்னத்திரை நடிகை திடீர் தற்கொலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 12:26:37 PM (IST)

காவல் துறையின் அனுமதி உத்தரவில் அதிருப்தி: தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:42:19 AM (IST)

போர்சூழலில் தவித்து வந்த மீனவர்களை மீட்ட மத்திய அரசு - பிரதமர் மோடிக்கு நன்றி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:53:01 AM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

