» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாங்குநேரி அருகே விவசாயி வெட்டிக்கொலை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதன் 18, மார்ச் 2026 8:27:31 AM (IST)
நாங்குநேரி அருகே விவசாயி ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). விவசாயியான இவருக்கு சுபா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை ஆறுமுகம் பருத்திப்பாடு சாலை வழியாகத் தனது வயலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்தனர்.
அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதலை நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்றடைப்பு போலீசார், ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலக்கையும் கடந்து வெற்றி பெறுவோம்: இப்தார் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
புதன் 18, மார்ச் 2026 12:16:21 PM (IST)

வங்கிகளில் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 20 முகமைகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்!
புதன் 18, மார்ச் 2026 10:48:07 AM (IST)

நான் முதல்வன் திட்டம்: ஜப்பானில் பயிற்சி பெற சாத்தான்குளம் அரசு கல்லூரி மாணவி தேர்வு!
புதன் 18, மார்ச் 2026 10:38:40 AM (IST)

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதன் 18, மார்ச் 2026 10:33:48 AM (IST)

கடன் தொல்லையால் விபரீத முடிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
புதன் 18, மார்ச் 2026 10:26:15 AM (IST)

அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)

