» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் சேவையில் மாற்றம்: இன்று முதல் மாற்றுப்பாதையில் இயக்கம்!
புதன் 18, மார்ச் 2026 8:19:06 AM (IST)
விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் நடைபெறும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாலக்காடு - திருச்செந்தூர் இடையேயான இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
விருதுநகர் இரயில்வே யார்டு பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 10:50 மணி முதல் மாலை 4:50 மணி வரை அவசரப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு இரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பாலக்காடு சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில், இன்று வழக்கமான பாதைக்கு மாற்றாக மதுரை சந்திப்பு, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
இந்த மாற்றுப்பாதை இயக்கத்தின் போது திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய இரயில் நிலையங்களுக்கு இந்த இரயில் செல்லாது. அதற்குப் பதிலாக, மதுரை கிழக்கு மற்றும் மானாமதுரை ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இந்தச் சேவை மாற்றத்தைக் கவனித்துத் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு இரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.36 கோடி: 1 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி காணிக்கை!
வெள்ளி 20, மார்ச் 2026 7:44:43 AM (IST)

தமிழகத்தில் மார்ச் 21ம் தேதி ரமலான் பண்டிகை : அரசு காஜி கூட்டமைப்பு அறிவிப்பு
வியாழன் 19, மார்ச் 2026 8:25:15 PM (IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம் - 12 மாற்று ஆவணங்கள் அறிவிப்பு!
வியாழன் 19, மார்ச் 2026 5:40:58 PM (IST)

ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 19, மார்ச் 2026 5:08:32 PM (IST)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!
வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)

