» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)
மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது..
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலமான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அலட்சியம்: புகார் அளிக்க வந்த பெற்றோரை அலைக்கழித்த குளத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

திமுகவின் மிரட்டலால் ரஜினி பின்வாங்கினார்; ஆனால் விஜய் அஞ்சமாட்டார்! - ஆதவ் அர்ஜுனா
வியாழன் 12, மார்ச் 2026 5:45:26 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!
வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
வியாழன் 12, மார்ச் 2026 4:26:04 PM (IST)

ஜன நாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? – ரூ. 120 கோடியைத் திரும்பக் கேட்கும் முன்னணி நிறுவனம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:19:27 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

