» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை
புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST)
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் மின் கம்பம் அருகே கருப்புப் பை ஒன்றில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள பார்த்தசாரதி தெருவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சாலையோர மின் கம்பம் அருகே மர்மமான முறையில் கிடந்த கருப்புப் பையைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், வடபாகம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பையைச் சோதனை செய்தனர். அப்போது பைக்குள் மனித மண்டையோடு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இது உண்மையான மனித எலும்பா? அல்லது மாந்திரீகச் செயல்களுக்காக யாராவது இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகரக் காவல் கண்காணிப்பாளர் சுனில் சம்பவ இடத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அந்த எலும்புகள் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மண்டையோடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST)

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

மதுரை சித்திரை திருவிழா: ஏப்.19ல் கொடியேற்றம்; மே 1ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!
புதன் 11, மார்ச் 2026 4:42:43 PM (IST)

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து
புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST)

ஆர்டர்லி முறை ஒழிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, மார்ச் 2026 11:38:12 AM (IST)

