» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை அரசுப்பள்ளி உணவில் பல்லி: 43 மாணவர்கள் பாதிப்பு - இபிஎஸ் கண்டனம்!
புதன் 11, மார்ச் 2026 10:55:14 AM (IST)
கோவை அரசுப்பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்டதால் 43 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று மதிய உணவு உட்கொண்ட 43 மாணவ, மாணவியருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. மதியம் பரிமாறப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததாகவும், அந்தச் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிட்டதாலேயே மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: "கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் 43 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சிகிச்சையில் உள்ள பிள்ளைகளைக் காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது. இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டியளித்தும், சில ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடாமல் தவிர்த்தது வருத்தமளிக்கிறது. மாணவர்களின் உயிர் மற்றும் சத்துணவு போன்ற முக்கியமான திட்டங்களில் அரசு தொடர்ச்சியாக அலட்சியம் காட்டி வருகிறது.
2021-ம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற உணவால் பாதிக்கப்பட்டும், அது குறித்துக் கவலைப்படாமல் "சாம்பார் சுவை எப்படி?" என மேடை போட்டு விளம்பரம் செய்வதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. இறுதியாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரியச் சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆர்டர்லி முறை ஒழிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் கடும் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன் 11, மார்ச் 2026 11:38:12 AM (IST)

தமிழகத்தில் கழித்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி!!
புதன் 11, மார்ச் 2026 11:16:05 AM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித்திருவிழா: இரட்டை திருப்பதியில் சாத்துமுறை வைபவம் கோலாகலம்
புதன் 11, மார்ச் 2026 8:31:03 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: போலீசார் தீவிர விசாரணை
புதன் 11, மார்ச் 2026 8:27:39 AM (IST)

மானாமதுரை விசாரணை கைதி மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
செவ்வாய் 10, மார்ச் 2026 8:11:37 PM (IST)

