» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் : தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

செவ்வாய் 10, மார்ச் 2026 12:14:39 PM (IST)

2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் வணிக ரீதியிலான எரிவாயு தட்டுப்பாடு மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளைகுடா போர் சூழலால் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேநீர் கடைகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உணவகங்கள் மூடப்பட்டால், அவற்றைச் சார்ந்த விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற விநியோகப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பெட்ரோலியப் பொருட்கள் மத்தியப் பட்டியலில் இருந்தாலும், அதன் விளைவுகளைக் கையாள வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. 

எனவே, முதல்வர் உடனடியாக டெல்லி சென்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். 2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிப்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory