» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி தனியார் ஆலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் எண்ணெய் ஆலை மற்றும் டயபர் தயாரிப்பு தொழிற்சாலை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் இயங்கி வரும் தனியார் எண்ணெய் ஆலை வளாகத்தில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான 'டயபர்' தயாரிக்கும் தொழிற்சாலையும் செயல்பட்டு வருகிறது. இதன் கிடங்கில் டயபர் தயாரிக்கத் தேவையான பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இன்று நண்பகல் வேளையில், ஆலைக்கு அருகே இருந்த மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பொறிகள் சிதறியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தீப்பொறிகள் பஞ்சுக் கிடங்கில் விழுந்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனப் பரவி ஆலை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
தகவலறிந்து தூத்துக்குடி, தெர்மல் நகர் மற்றும் சிப்காட் ஆகிய பகுதிகளிலிருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இதனால் தீ அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டயபர் மூலப்பொருட்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன. விபத்து குறித்துத் தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:26:06 PM (IST)

கோவில் சொத்துக்களும் உருக்கிய தங்கமும் எங்கே? - சேகர்பாபுவுக்கு அண்ணாமலை சரமாரி கேள்விகள்!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:02:52 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

எரிபொருள் தட்டுப்பாடு: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:26:34 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

கொசுவர்த்தி சுருளால் தீ விபத்து : கணவன், மனைவி, குழந்தை உயிரிழப்பு
செவ்வாய் 10, மார்ச் 2026 12:41:21 PM (IST)


srinivasanMar 9, 2026 - 05:43:36 PM | Posted IP 172.7*****