» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுகவின் கொடூரமான பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
சனி 24, ஜனவரி 2026 11:33:23 AM (IST)

திமுகவின் கொடூரமான பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை வழங்குவோம் என்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அவர் பேசியதாவது: தமிழகம் ஒரு மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது. பாஜகவின் என்டிஏ அரசைத்தான் தமிழகம் இப்போது விரும்புகிறது. தமிழகத்தில் இருந்து திமுக அரசை விரட்டி அடிக்க, திமுக ஆட்சியின் முடிவுரைக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
தமிழக மக்களுக்கு திமுக அரசு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. திமுக அரசை ‘சிஎம்சி’ அரசு என்று மக்கள் அழைக்கின்றனர். அதாவது, ‘கரப்ஷன் - மாஃபியா - க்ரைம்’. திமுக அரசு ஊழல், குற்றவாளிகுழுக்கள், குற்றங்கள் ஆகியவற்றைதான் ஆதரிக்கிறது. அதனால், திமுக மற்றும் ‘சிஎம்சி’ ஆகிய இரண்டையுமே கிள்ளி எறிய வேண்டும் என்று தமிழக மக்கள் தீர்மானித்துவிட்டனர்.
தங்களது ஒரே ஒரு குடும்பத்துக்காக மட்டுமே திமுக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. வாரிசு அரசியல், ஊழல், பெண்களை அவதூறாகப் பேசுவது, கலாச்சாரத்தை வசைபாடுவது போன்றவற்றை தொடர்ச்சியாக செய்கின்றனர். திமுகவின் கொடூரமான பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்தாக வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் மத்திய என்டிஏ அரசு அதிகார பகிர்வு வாயிலாக மட்டுமே தமிழகத்துக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி அளித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் வழங்கியதைவிட இது 3 மடங்கு அதிகம். அதேபோல, தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி அளித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.11 லட்சம் கோடி உதவிகளை அளித்துள்ளது.
போதைப் பொருள் குற்றங்களைச் செய்யும் மாஃபியா கும்பலிடம் இளைஞர்களை விட்டுவிட்டது திமுக அரசு. தங்கள் கண்முன்பு குழந்தைகள் சீரழிவதைப் பார்த்து பெற்றோர் துடிக்கின்றனர். இளைஞர்களை போதைப் பொருள் அபாயத்தில் இருந்து மீட்க வேண்டும். நீங்கள் என்டிஏவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தை போதை அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்.
தமிழகத்தில் பாஜக - என்டிஏவின் இரட்டை இன்ஜின் அரசு அவசியமானதாகும். மத்திய அரசோடு இணைந்து பயணிக்கும்போது, முதலீடுகள், வளர்ச்சி அனைத்தும் எளிதாக நடைபெறும். உங்கள் வாக்குகளால் தமிழகத்தில் என்டிஏ அரசை அமைத்துத் தாருங்கள். எங்கள் அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
சமீபத்தில் முருகப் பெருமானுக்கு கார்த்திகை தீபம் ஏற்றும் விஷயத்தில் நம் தலைவர்கள் எல்லாம், பக்தர்களின் அதிகாரங்கள், உரிமைகளுக்கு குரல் கொடுத்தனர். ஆனால், திமுகவும், அதன் கூட்டணியும் தங்களது வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களையும் விட்டுவைக்காமல், அவர்களையும் அவமானப்படுத்தின. தமிழக இளைஞர்கள் அனைவரும் நமது பாரம்பரியத்தைக் கொண்டாடி மகிழ வேண்டும். அதற்கு என்டிஏ அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும்.இவ்வாறு பிரதமர் பேசினார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் தலைவர் ஏ.சி.சண்முகம், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் தலைவர் ஜெகன்மூர்த்தி, தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் திருமாறன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், எல்.முருகன், அண்ணாமலை, தமிழிசை, அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பாஜகவின் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ். விமல்சந்த், அதிமுக மகளிர் அணி இணைசெயலாளர் மரகதம் குமரவேல் எம்எல்ஏ உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், டிஜிபி (பொறுப்பு) ஜி.வெங்கடராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிறுமி ஓவியத்தால் நெகிழ்ந்த பிரதமர்: பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி நிகழ்த்தும் ஆவேச உரையை தொண்டர்கள் ஆரவாரத்துடன் கேட்டபடி இருந்தனர். ஒரு சிறுமி மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தான் வரைந்த ஓவியத்தை உயர்த்திப் பிடித்தபடி இருந்தார். ஓவியத்தை பிரதமர் பார்த்துவிட மாட்டாரா என்பதிலேயே சிறுமியின் கவனம் இருந்தது. பிரதமரை அவரது தாய் ஆசீர்வதிப்பது போன்ற ஓவியம் அது.
இதை கவனித்த பிரதமர், சட்டென்று பேச்சை நிறுத்தினார். ‘‘ஒரு குழந்தை நீண்ட நேரமாக கையில் ஓர் ஓவியத்தை ஏந்தியபடி நிற்கிறது. அது என் தாயின் படம்போல தெரிகிறது. அதை என்னிடம் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்று அந்த குழந்தை துடிக்கிறது. குழந்தையே! அந்த படத்தில் உன் பெயர் மட்டும் இருந்தால் போதும்.
நிச்சயம் பெற்றுக்கொள்வேன். அதோடு, என் வாழ்த்துக் கடிதத்தையும் அனுப்பி வைக்கிறேன்’’ என்று கூறிய பிரதமர், உடனே கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து, சிறுமியின் பெயர், முகவரியை தவறாமல் குறித்துக்கொண்டு, ஓவியத்தை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவு பணியாளர்களுக்கான புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சனி 24, ஜனவரி 2026 11:53:11 AM (IST)

திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!
சனி 24, ஜனவரி 2026 10:35:09 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
சனி 24, ஜனவரி 2026 8:11:26 AM (IST)

வரும் சட்டமன்ற தேர்தல் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
வெள்ளி 23, ஜனவரி 2026 4:56:50 PM (IST)

மதுராந்தகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி: இ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் உற்சாக வரவேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 4:42:07 PM (IST)

ஊரக வேலைவாய்ப்பு திட்டம் : சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேறியது!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:46:57 PM (IST)