» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு
திங்கள் 12, ஜனவரி 2026 11:38:10 AM (IST)

ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி யூனியன் அலுவலக கட்டிடத்தில் இந்த கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கல்லூரி யூனியன் அலுவலக கட்டிடத்தில் இந்த கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கல்லூரி அலுவலகத்தில் பேராசிரியர்களின் வருகை பதிவேடு, கல்லூரியில் இயங்கி வரும் பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரியில் கட்டமைப்பு வசதிகள் குறித்து பேராசிரியர்களிடம் கேட்டறிந்தார். வகுப்பறைகளுக்கு சென்ற அவர் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அப்போது கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ மாணவியருக்கு அரசு வழங்கிவரும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கி பேசினார். விரைவில் புதிய கட்டிடத்திற்கு கல்லூரியை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், சண்முகையா எம்.எல்.ஏ, கல்லூரி முதல்வர் கிரேசா ஜேக்கப், தாசில்தார் சண்முகவேல், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பொங்கல் விழா கோலாகலம்: ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
வியாழன் 15, ஜனவரி 2026 3:45:54 PM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

