» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)



திருநெல்வேலியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணைகளை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தூய யோவான் கல்லூரி இணைந்து நடத்திய மாபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், கிறிஸ்துவ தேவாலையங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் முன்னிலையில் இன்று (10.01.2026) வழங்கினார்.

இன்று நடைபெற்ற முகாமில் 106 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது. 2,339 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர், அவர்களில் 635 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அந்தோனி, ஜெப்ரின், தூய யோவான் கல்லூரி முதல்வர் சுதாகர் ஐசக், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் க.இசக்கிபாண்டியன், முக்கிய பிரமுகர்கள் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, பரமசிவன் ஐயப்பன், சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory