» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு

வெள்ளி 2, ஜனவரி 2026 4:36:07 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.01.2026) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் முன்னிலையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாநகர பகுதியில் சாலை பணிகளின் முன்னேற்றம், அதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், முதலமைச்சரின் முகவரியின் மனுக்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் நிலை முன்னேற்றம் மற்றும் அதற்கு துறைவாரியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மேலும், தாயுமானவர் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் இல்லங்களுக்கே சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், கலைஞர் கனவு இல்லம், தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், காக்கும் கரங்கள் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

நீர்வளத்துறையின் மூலம் அணைகளின் நீர்வரத்து இருப்பு மற்றும் நீர்போக்கு விபரங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குளங்கள் மற்றும் கால்வாய்களை பார்வையிட வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகளை தேவையான அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் காலதாமதம் ஏற்படாத வகையில் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனைத்துத்துறைசார்ந்த அலுவலர்களும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தார்கள்.

தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.3.05 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் அணுகுசாலை அமைக்கும் பணிகளையும், ரூ.4.78 கோடி மதிப்பில் என்.ஜி.ஓ காலனி முதல் டக்கரம்மாள்புரம் வரை புதிய சாலை அமைக்கும் பணிகளையும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.59.95 இலட்சம் செலவில் டக்கரம்மாள்புரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் தரத்தினையும், ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.4.2 இலட்சம் செலவில் ராஜகோபால் நகர் முதல் கிறிஸ்துநகர் வரை நடைபெற்று வரும் சாலைப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.3.30 கோடி மதிப்பில் இலங்கை வாழ் தமிழர்களுக்காக கட்டப்பட்டு வரும் 48 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை , மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு -சிப்காட்) மா.சுகன்யா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory