» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)
தமிழக கடலோர மாவட்டங்களில் டிச.9 முதல் 14-ம் தேதி வரை கனமழை வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகம் கடந்து அரபிக்கடல் சென்ற தாழ்வுப் பகுதியும், காற்று சுழற்சியும் ஒன்றிணைந்து லட்சத்தீவுக்கு தெற்குப் பகுதியில் நீடிக்கிறது. புதிதாக குமரிக்கடல் நோக்கி நகர்ந்த காற்று சுழற்சி காரணமாக தற்போது டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை பொழிந்துவருகிறது.
அரபிக்கடல் தாழ்வு சுழற்சி கிழக்கு காற்றை ஈர்ப்பதன் காரணமாக வால்பாறை முதல் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு உண்டு. இதேநிலை வரும் 8-ம் தேதி வரை தொடரும்.
மலேசியா, தாய்லாந்து கடந்து வங்கக் கடலில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் தாழ்வு நிலை வரும் 9 முதல் 14-ம் தேதி வரை இலங்கை, குமரிக்கடல், தென் தமிழகம் வழியாக அரபிக்கடல் நோக்கி நகர்ந்து, செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களின் உள்பகுதிகளில் மிதமானது முதல் சற்று கனமழை வரை கொடுக்கும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாய்மைப் பருவத்தை தள்ளிப்போடாதீர்கள்: அமைச்சர் பி. கீதா ஜீவன் அறிவுரை!
திங்கள் 2, மார்ச் 2026 5:47:32 PM (IST)

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்
திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - ஆட்சியர் சுகுமார் மனுக்களைப் பெற்றார்
திங்கள் 2, மார்ச் 2026 5:25:10 PM (IST)

விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைப்பதா? கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
திங்கள் 2, மார்ச் 2026 12:30:21 PM (IST)

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது : 8.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்
திங்கள் 2, மார்ச் 2026 10:46:46 AM (IST)

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மதுரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
திங்கள் 2, மார்ச் 2026 8:24:46 AM (IST)

