» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டித்வா புயல் பாதிப்பு : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு

திங்கள் 1, டிசம்பர் 2025 4:24:34 PM (IST)



டித்வா புயல் பாதிப்புகளுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், 'டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், ‘டித்வா’ புயல் காரணமாக டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர் சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நெற்பயிர் மற்றும் இதர பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கி, அது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory