» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்!

திங்கள் 24, நவம்பர் 2025 11:43:16 AM (IST)



தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 

தென்காசியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தது. 

பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளின் 5 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அரவிந்த் மற்றும் எலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory