» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
புதன் 12, நவம்பர் 2025 8:43:51 AM (IST)
பாளையங்கோட்டையில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் ‘தர்மஅடி’ கொடுத்தனர். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் காத்து நின்றனர். அப்ேபாது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தவறான கண்ணோட்டத்துடன் மாணவிகளை நோட்டமிட்டவாறு இருந்தார்.
இதனால் சில மாணவிகள் வேறு இடத்துக்கு நகர்ந்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் திடீரென்று 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்றும் சக மாணவிகள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து சென்று மாணவிக்கு பாலியல் தொல்ைல கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பாளையங்கோட்டை மகாராஜநகர் ரகுமத் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் (35) என்பது தெரியவந்தது. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ரமேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவருடைய தந்தை கருப்பசாமி, ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் இறந்து விட்டார். பாளையங்கோட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு வலை : தலைமை ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 9:43:45 PM (IST)

கொலை - கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:33:50 PM (IST)

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 5:41:49 PM (IST)

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)


.gif)