» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்தத்தால் மின் கட்டணம் 80 சதவீதம் உயரும்
புதன் 5, நவம்பர் 2025 8:58:52 AM (IST)
மத்திய அரசின் புதிய மின்சார சட்ட திருத்தத்தின் மூலம் வீட்டு உபயோக மின்சார கட்டணம் 80 சதவீதம் உயரும் என மின்துறை பொறியாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி கூறியதாவது: 6-வது முறையாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை கொண்டு வரவுள்ளது. கடந்த 5 திருத்தங்களையும் அனைத்து மாநிலங்களும் கடுமையாக எதிர்த்ததால் கைவிடப்பட்டன. தற்போது கொண்டு வரும் சட்டதிருத்தம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொதுத்துறை வினியோக நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க வழிவகுக்கும்.
மேலும், இந்த சட்ட திருத்தம் ரெயில்வே, மற்றும் தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சாரத்தின் விலையை 20 சதவீதம் குறைப்பதுடன், வீட்டு உபயோக மின் கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தும்.
புதிய சட்டத்திருத்தங்களுக்கு, வினியோக நிறுவனங்களின் கடனை மத்திய அரசு காரணமாக காட்டுகிறது. ஆனால், வினியோக நிறுவனங்களின் நஷ்டத்திற்கு மத்திய அரசு தனியாருக்கு சாதகமாக வகுத்த மின்சார கட்டணக் கொள்கைகளும், விதிகளுமே காரணம். ஏற்கனவே, மின்துறையில் உற்பத்தி நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு விட்டது.
தற்போது வினியோக நிறுவனங்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் என்பது சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும். எனவே, மத்திய அரசு மின்சார சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசு இந்த சட்ட திருத்தத்தை ஏற்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? என்று தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெகவின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு: சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!
புதன் 5, நவம்பர் 2025 12:49:22 PM (IST)

பெண்ணை தாக்கியதாக புகார்: நடிகர் ஜி.பி.முத்து உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!
புதன் 5, நவம்பர் 2025 8:50:52 AM (IST)

முக்காணி உயர்மட்ட பாலத்தில் சீரமைப்பு பணி தொடக்கம் : ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
புதன் 5, நவம்பர் 2025 8:48:27 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை: ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:53:48 PM (IST)

தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் துவக்கம்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:19:20 PM (IST)


.gif)