» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு

வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)



தூத்துக்குடியில் இன்று சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையை புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் புதிய நிர்வாக மேலாளராக தேவா காபிரியேல் ஜெயராஜனை திருமண்டல நிர்வாகியும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி நியமனம் செய்தார். அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். 

தொடர்ந்து திருமண்டல நிர்வாக மேலாளர் தேவா காபிரியேல் ஜெப ராஜன் திருமண்டல நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்தார். இதில் திருமண்டல நிதி நிர்வாகி அன்பர்தாஸ் உடன் இருந்தார். பின்னர் ஸ்டேட் பாங்க் காலனி எழில்நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல மிஷன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory