» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியதில் மூன்று பயணிகள் காயம் அடைந்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சிமணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) என்பவர் 4வது நடைமேடையில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வடமாநில வாலிபர் ஒருவர் இரும்புக்கம்பியால் பாண்டிதுரையை தாக்கினார்.
தொடர்ந்து, அதே நடைமேடையில் நின்றிருந்த மேலும் 2 பேரையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றார்.காயமடைந்த மூவரையும் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற 2 பேரின் விவரங்கள் தெரியவில்லை; அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் தச்சநல்லூா் ரயில்வே பாலம் அருகே நின்ற உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)
