» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக தலைவர் விஜய் திருச்சி வருகை: ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

சனி 13, செப்டம்பர் 2025 11:01:55 AM (IST)



தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். 

சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு தொண்டர்கள் சூழ்ந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. 

முன்னதாக விஜய்யின் பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டிருந்தது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மரக்கடை பகுதிக்கு காலை 10.30 மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. மேலும், விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கார், பைக்குகள் மூலம் அவரைத் தொடர்ந்து வருகின்றனர்.இதனிடையே, திருச்சியில் முக்கிய பகுதியான டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அரியலூர் உட்கோட்ட எல்லைக்குள் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 11.25 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான அரியலூர் பழைய பஸ் நிலைய பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். தங்களது தலைவர் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு 

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கீழப்பழுவூர் புறவழிச்சாலையில் இருந்து கீழப்பழுவூர் திடீர் குப்பம், வாரணவாசி, தவுத்தாய்குளம், அரியலூர் கலெக்டர் அலுவலக ரவுண்டானா வழியாக அரியலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வரும்போது சாலை வலம் (ரோடு ஷோ) நடத்தக் கூடாது. 

மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. பரப்புரை வழித்தடத்தினில் தங்கள் தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. பொதுமக்கள் பரப்புரையை சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை தாங்களே அமைத்து தர வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுந்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது உள்பட 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory