» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் சான்றிதழ் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் இன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக Internship முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், சான்றிதழ் வழங்கினார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு Internship (பணி அனுபவ பயிற்சி) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை பற்றி மற்றும் புத்தாக்கத்திற்காக வழங்கி வரும் திட்டங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

முதல் கட்டமாக, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, முகமது இஸ்மாயில் ஐடிஐ கல்லூரியை சார்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கு Internship பயிற்சி முடித்தற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் மு.சிவ பாரதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory