» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய நடிகர் டாம் சாக்கோ கார்: தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 6, ஜூன் 2025 10:40:15 AM (IST)
தருமபுரி அருகே கார் விபத்தில் நடிகர் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். டாம் சாக்கோ உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து இருந்தார். இவர் மீது நடிகை ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் நடிகர் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ பலியானார். நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)