» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

வெள்ளி 9, மே 2025 5:13:33 PM (IST)

விருதுநகர்  அருகே தனியார் தொழிற்சாலையில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செவ்வல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வாட்ச்மேனாக சுந்தரராஜ் மகன் மோகன்ராஜ் (55) என்றவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் இவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

இவரை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்த மோகன்ராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அல்லது கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரியவருகிறது. மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சாத்தூர் டிஎஸ்பி 949810484 வெம்பக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 9498196111 ஆகிய நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory