» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள்: ஆட்சியர் ஆணை வழங்கினார்!
வெள்ளி 21, மார்ச் 2025 5:51:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 வழித்தடங்களில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 9 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 26.03.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 180 விண்ணப்பங்களுக்கான குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயங்குவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், துணை போக்குவரத்து ஆணையர் (திருநெல்வேலி) என்.ரவீசந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (திருநெல்வேலி) என்.ஆர்.சரவணன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் டி.ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் படுகொலை: தேசிய பட்டியல் சமூக ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 8:39:41 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:25:54 PM (IST)

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது: மலேசிய அரசு நிபந்தனை?
செவ்வாய் 23, டிசம்பர் 2025 4:07:36 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

விஜய் காரை மறித்து தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகி போராட்டம்: பனையூரில் பரபரப்பு!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:16:59 PM (IST)


.gif)