» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கூட்டப்புளி கடற்கரையில் சுனாமி ஒத்திகை பயிற்சி : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
திங்கள் 4, நவம்பர் 2024 4:17:25 PM (IST)
கூட்டப்புளி கிராமம் கடற்கரை பகுதியில் வருகிற 6ஆம் தேதி சுனாமி மற்றும் வெள்ளகால பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. பருவமழை காலத்தினை எதிர்கொள்ளும் வகையிலும், பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து மக்களை மீட்பது தொடர்பாகவும், ஒத்திகை பயிற்சி (CSSR Mock Exercise) 05.11.2024 அன்று காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வைத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF), திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவல் துறை அலுவலர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளது. மேலும், அதனை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF) காவல் துறையினர், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆகியோர் தாங்கள் வைத்துள்ள மீட்பு கருவிகளை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளனர். எனவே, மேற்காணும் பேரிடர் ஒத்திகை பயிற்சியினையும் மற்றும் பேரிடர் மீட்பு கருவிகளின் கண்காட்சியினையும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 06.11.2024 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இராதாபுரம் வட்டம், கூட்டப்புளி கிராமம், கடற்கரை பகுதியில் வைத்து சுனாமி மற்றும் வெள்ளகால பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை பயிற்சி மேற்படி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் (NDRF) காவல் துறையினர், திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
மேற்படி ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:34:39 PM (IST)

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அதிகபட்ச தண்டனை: முதல்வர் ஸ்டாலின் உறுதி
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:14:42 PM (IST)

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஷ் வெளியிட்டார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 11:34:19 AM (IST)

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:30:11 AM (IST)

ஜவ்வாது மலையில் தங்கக்காசு புதையல் கண்டெடுப்பு : அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
திங்கள் 3, நவம்பர் 2025 9:22:21 PM (IST)

வணிக வளாக கட்டிடம் இடிந்து காவலர் படுகாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 3, நவம்பர் 2025 7:49:54 PM (IST)


.gif)