» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக்கில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு மீட்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!!
வெள்ளி 11, அக்டோபர் 2024 7:16:51 PM (IST)

தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் நிறுத்தியிருந்த பைக்கில் நல்ல பாம்பு பதுங்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மீனாட்சிபுரம் அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடையில் நிறுத்தியிருந்த வாகனத்தின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர், பைக்கின் பாகங்களை கழற்றி உள்ளே இருந்த சுமார் 2 அடி நல்ல நீளமுள்ள பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை, வனப் பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பாம்புகள் சூடான இடங்களில் தஞ்சம் அடைவது இயல்பு. பைக் இன்ஜின் பகுதி சூடாக இருப்பதால் பாம்புகள் பைக்கில் புகுந்து கொள்ளும். அப்படித்தான் பைக்கில் அந்தப் பாம்பு பதுங்கியுள்ளது. ஆகவே, பைக்கை நிறுத்துபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


