» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்!
வெள்ளி 11, அக்டோபர் 2024 12:48:50 PM (IST)
தமிழகத்தில் 16ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலையில, கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


