» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கை ரோந்துப்படகு மோதி பலியான மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி:முதல்வர் !
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 4:51:40 PM (IST)
இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் பலியான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் ராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (ஆக. 1) அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரிய வருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் மத்திய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது.
இச்சம்பவத்தை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும். இச்சம்பவத்தில் உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


