» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சனி 22, ஜூன் 2024 9:49:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

கடந்த 12.05.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரகுளம் சோதனைச் சாவடி அருகே வந்த ஒருவரிடம் தகராறு செய்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வம் (43), ஸ்ரீவைகுண்டம் வெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்களான முருகேசன் மகன் அருன் (எ) அருணாச்சலம் (27) மற்றும் இசக்கிமுத்து மகன் கண்ணன் (எ) கருப்பசாமி (30) ஆகியோரை சேரகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். ஆட்சியர்  உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்  பத்மநாபபிள்ளை மேற்படி 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory