» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் மே 19, 20 நாள்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!
சனி 18, மே 2024 5:36:57 PM (IST)

தமிழகத்தில் மே 19, 20 ஆகிய நாள்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(மே 18) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 19) தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (மே 20) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும்,விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் மே 18 முதல் 22 வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடலின் கிழக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மி வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு : அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் புகார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:08:34 PM (IST)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)

தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது: விஜயை விமர்சித்த சீமான்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:07:44 PM (IST)

மரக்கடையில் விஜய் பிரசாரத்தால் ரூ.1¼ லட்சம் சேதம்: தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:00:41 PM (IST)
