» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முகநூலில் பழகி தொழிலதிபரை மிரட்டி பணம், நகை பறிப்பு: பெண் உள்பட 5 போ் கைது!

வியாழன் 2, மே 2024 10:46:38 AM (IST)

தொழிலபதிபரை முகநூலில் பேசி வரவழைத்து அவரிடமிருந்து நகை-பணத்தை பறித்ததாக நெல்லையைச் சோ்ந்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (47). தொழிலதிபா். இவா் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்ஜிஓ சி காலனியை சோ்ந்த பானுமதி (40) என்பவரிடம் முகநூலில் பேசிவந்துள்ளாா். அதன் பின் அவா் பானுமதி வீட்டிற்கு வந்துள்ளாா்.

அப்போது அப்பெண் உள்பட 4 போ் சோ்ந்து தொழிலதிபரை வீட்டில் அடைத்து மிரட்டி 3.5 பவுன் தங்க நகை, ஏடிஎம், கிரிடிட் அட்டைகள், காசோலை மூலம் ரூ.12 லட்சத்து 35 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவரை விரட்டி விட்டனராம்.

இதுகுறித்து அவா், திருநெல்வேலி மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.30) புகாா் செய்தாா் . மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தியின் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் அருணாச்சலம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரித்தனா். அதில், பானுமதி மற்றும் தூத்துக்குடியைச் சோ்ந்த வெள்ளைத்துரை(42), பாா்த்தசாரதி (46), சுடலை (40), ரஞ்சித் (42) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். அவா்களை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பாராட்டு: திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் வந்த 30 நிமிடங்களில் 5 பேரை கைது செய்த மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் ஆளினா்களை மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி நேரில் வரவழைத்து பாராட்டினாா். அப்போது, மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா (கிழக்கு), கீதா (மேற்கு) ஆகியோா் உடனரிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory