» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் சித்திரை பௌர்ணமி விழா: 1008 கலச விளக்கு வேள்வி பூஜை

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 9:25:45 PM (IST)



மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு 1008 கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி யாக குண்டங்கள் அமைத்து இயற்கை சீற்றம் தணியவும் உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அருளிய வழிகாட்டுதலின்படி   மாபெரும் வேள்வி பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 22ஆம் தேதி திங்கட் கிழமை விடியற்காலை 3.30 மணியளவில் மங்கள இசையுடன் விழா துவங்கியது.  காலை 4 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. 

காலை 9 மணிக்கு ஆன்மிக குரு  அருள்திரு பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. இதனை அடுத்து அன்னதானத்தை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ்  தொடங்கி வைத்தார். சித்ரா பௌர்ணமி தினமான நேற்று  பகல் 12.15 மணிக்கு உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் இயற்கை சீற்றங்கள் தணியவும்,இயற்கை வளம் பெறவும், மழை வேண்டியும், மக்கள் வளமுடனும் நலமுடனும் வாழவும் வேண்டி குரு பீடத்தின் முன் நாக வடிவில் சக்கரமும், கருவறை முன்மேரு சக்கரமும், பஞ்சபூத சக்கரங்களும் ஓம் சக்தி மேடை முன்பு அடிகளார் சக்கரமும்  அமைக்கப்பட்டிருந்தது. 

சூலம், சதுரம், ஒற்றை நாகம், இரட்டை நாகம்  ஆகிய 1008 யாக குண்டங்கள் அமைத்து  ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில்  சித்தர் பீடத்தில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையை  வணங்கி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண் ராஜ் ஆகியோர் யாக குண்டத்தில் கற்பூரம் மற்றும் நவசமித்து இட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தனர்.

கலச, விளக்கு விநியோகத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் உமாதேவி ஜெய்கணேஷ்  துவக்கி வைத்தார். ஜாக்கண்ட் ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன், தென்னக ரயில்வே அதிகாரி செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த வேள்வி பொறுப்பினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச் செயலாளர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா பொறுப்பினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தஞ்சை மாவட்டத்  தலைவர் வாசன் ,பொறுப்பாளர்  ஜெயராமன் மற்றும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி மன்ற, சக்திபீட  நிர்வாகிகளும் தொண்டர்களும் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory