» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சன் டிவி என்ற பெயரை எப்போது தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? தமிழிசை கேள்வி!

திங்கள் 22, ஏப்ரல் 2024 12:12:01 PM (IST)

"உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை எப்போது தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?" என்று தமிழக முதல்வருக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

'தூர்தர்ஷன்' இலச்சினை காவி நிறமாக மாற்றப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்று கேள்வி கேட்கும் ஸ்டாலின் அவர்களே....ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே உள்ளது.

எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள். காவி என்பது தியாகத்தின் வண்ணம்.... நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

வடிவேல் பூபதிApr 23, 2024 - 04:08:05 PM | Posted IP 172.7*****

இன்னுமா இந்த விடியல் திமுக சொல்வதை நம்புகிறீர்கள் ?

ராமநாதபூபதிApr 23, 2024 - 12:26:43 PM | Posted IP 162.1*****

அரசு நிறுவனத்துக்கும் தனியார் நிறுவனத்துக்கும் வித்தியாசம் தெரியாத மேதகு மேடம்

dumilisai அவர்களேApr 23, 2024 - 09:14:02 AM | Posted IP 162.1*****

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 10 ரூபாய் குறைக்கப்படும் , சிலிண்டர் 100 ரூபாய் குறைக்கப்படும் , அணைத்து குடும்ப தலைவிக்கு மட்டும் மாதம் 1000 ரூபாய் என்று கூறி தகுதி யுள்ளவருக்கு மட்டும் 1000 ரூபாய் தெரியுமா? திருடனை நம்பலாம் ஆனால் திமுகவை நம்பக்கூடாது

dumilisaiApr 22, 2024 - 01:09:03 PM | Posted IP 172.7*****

நீங்க சொன்னமாதிரி பெட்ரோல் விலை டீசல் விலை காஸ் விலை மண்ணெண்ணெய் விலை குறைந்தவுடன் பேர மாற்றிலெல்லாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory