» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விவசாய நிலம் வாங்குவதற்கு கடனுதவி : ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தகவல்

புதன் 29, நவம்பர் 2023 12:43:09 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலம் வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனாக பெறலாம் என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரைய தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படவுள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப் படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக எஞ்சிய கிரைய தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டு கழக நிதியிலிருந்து பயனாளிகளுக்கு 6% மிக குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் தாட்கோ www.tahdco.com என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் வட்டாட்சியர் அலுவலகம், 2வது தளம், தென்காசி. என்ற முகவரியில் உள்ள தாட்கோ அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்:04633-248711 மற்றும் அலைபேசி எண்:7448828513 மூலமாகவோ விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்; துரை இரவிச்சந்திரன்; தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory