» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஸ் வழங்க அலைக்களிக்கும் நெல்லை அரசு போக்குவரத்து கழகம்

புதன் 29, நவம்பர் 2023 12:25:01 PM (IST)

பேப்பர் கட்டு அனுப்ப பாஸ் வழங்க நெல்லை அரசு போக்குவரத்து கழகம் அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. 

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக கொக்கிரகுளம் டேப்போவில் பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது பேப்பர் கட்டு அனுப்ப பாஸ் விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி விண்ணப்பிக்கும் பத்திரிக்கை நிறுவண ஊழியர்களை இன்று போய் நாளை வாருங்கள் என்று கூறி நிர்வாகம் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் கடைசி நேரத்தில் சென்றால் ஏன் முன்பே வரவில்லை என்று கூறுகின்றனர். 

தினபூமி நாளிதழ் சார்பாக கடந்த 21.11.2023 தேதியன்று ரசீது எண்.0015078 படி ரூ.908/= செலுத்தியுளார்.  29.11.23 தேதியன்று ஊழியர் சென்ற போது நாங்கள் அனைத்து பேப்பர் நிறுவணங்களும் பணம் கட்டிய பின்னர் மொத்தமாக தான் பாஸ் வழங்கமுடியும் என கூலாக பதில் கூறுகின்றனர். 

இவ்விதம் போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டால் லாபத்தில் இயங்குவது எப்படி? என்பதை ஊழியர்கள், மட்டும் அதிகாரிகள்  தான் கூற வேண்டும். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று பத்திரிக்கை துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory