» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பேருந்தில் மழைநீா் ஒழுகிய விவகாரம்: மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது!

புதன் 22, நவம்பர் 2023 11:48:44 AM (IST)



தூத்துக்குடியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகிய சம்பவம் எதிரொலியாக பேருந்தின் மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அரசுப் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளதாக சரச்சை எழுந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகாதவாறு பேருந்தின் மேற்கூரையில் தார் ஷீட் ஒட்டப்பட்டது. 


மக்கள் கருத்து

மக்கள்Nov 23, 2023 - 04:22:40 PM | Posted IP 172.7*****

இதனால் தான் அரசாங்கம் தனியாருக்கு வழங்கப்படுகிறது

தமிழன்Nov 22, 2023 - 05:45:42 PM | Posted IP 172.7*****

தனியார் பேருந்து,தனியார் மருத்துவமனை,தனியார் பள்ளி,தனியார் கல்லூரி, தனியார் தொலைக்காட்சி, தனியார் பண்பலை, தனியார் தொலைபேசி,அலைபேசி இன்னும் நிறைய உள்ளது. இவர்களின் சேவை மிக சிறப்பாக உள்ளது.ஆனால் அரசு மற்றும் அரசு நிறுவங்களின் சேவை மிக மிக மோசம்.

இது தான் விடியல்Nov 22, 2023 - 12:24:40 PM | Posted IP 162.1*****

ஓட்டை பஸ் மேல ஸ்டிக்கர் ஆ ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory