» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய பூனை: வைரலாகும் வீடியோ!!

புதன் 22, நவம்பர் 2023 10:34:37 AM (IST)



கோவையில் வீட்டிற்குள் நுழைய முயன்ற நாக பாம்பை தடுத்து நிறுத்திய செல்லப் பிராணியான பூனையின் நெகிழ்ச்சி செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில், நான்கு அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் இருந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தியது. 

பூனையின் சீறலை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவர்கள் கதவை மூடியதுடன், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரர் ஒருவருக்கு தகவல் அளித்தனர்.  தகவலையடுத்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்து எடுத்துச் சென்றார்.

வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான பூனை, வீட்டிற்குள் பாம்பு நுழைவதை தடுத்து நிறுத்தியதுடன், பாம்பும் பூனையும் ஒன்றுக்கொன்று 15 நிமிடம் அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பூனை மற்றும் பாம்பு ஒன்றுக்கொன்று அசையாமல் பார்த்துக்கொள்ளும் காட்சியை நெகிழ்ச்சிக்குரிய விஷயமாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory