» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் மூளைச் சாவு அடைந்த ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
புதன் 22, நவம்பர் 2023 8:24:04 AM (IST)
திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறை சேர்ந்த தங்கபெருமாள் மகன் சதீஷ் (33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண்குழந்தை உள்ளது. வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் பள்ளி முடிந்து பரமன்குறிச்சி வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது நடுநாலுமூலைக்கிணறு பகுதியில் வந்தபோது, மாடு குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய சதீஷ் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விபத்தில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தனர். அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 91.94% மாணவர்கள் தேர்ச்சி!
வியாழன் 8, மே 2025 11:29:44 AM (IST)
