» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆவின் பால் விற்பனையில் திமுக அரசு மோசடி : அண்ணாமலை குற்றச்சாட்டு

செவ்வாய் 21, நவம்பர் 2023 10:55:52 AM (IST)

பாலில் கொழுப்புச்சத்தை குறைத்து விட்டு, விலையை குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை தி.மு.க. அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக்கொள்ள ஆவின் நிறுவனம் முடிவு எடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சென்னையில் சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40 சதவீதம் பங்குள்ள 4.5 சதவீதம் கொழுப்புச்சத்து நிறைந்த பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5 சதவீதம் கொழுப்புச்சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.

ஏற்கனவே, 6 சதவீதம் கொழுப்புச்சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவீதம் கொழுப்புச்சத்தே இருப்பது உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) அங்கீகரித்த பரிசோதனை கூடத்தில் தமிழக பா.ஜனதா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இப்படி, கொழுப்பு சத்துக்களை குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று ஊழல் தி.மு.க. அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது.

பாலில் கொழுப்புச்சத்தை குறைத்து விட்டு, விலையை குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை தி.மு.க. அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தமிழக அரசு தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory