» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது 2 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்: நெல்லையில் பரபரப்பு!!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:46:54 PM (IST)

நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வியாழக்கிழமை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் அறைக்குள் இரண்டு பேர் சென்றுள்ளனர். ஆனால், அவர்களின் செயல்பாடுகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் சந்தேகம் அடைந்த காவலாளி வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பஷீர் மகன் சலீம் உசேன் (25), பாலுவால் பகுதியைச் சேர்ந்த அசன் மகன் முபட் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இரண்டு பேரும் நூதன முறையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திருடுபவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது இரண்டு பேரும் போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடினர். இதைத் தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory