» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன் : மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:42:43 PM (IST)

மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன் என ம.நீ.ம. கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக கோவை மண்டல நிர்வாகிகளுடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார். கோவையில், உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சியில் (டைமண்ட் ஹால்) நடைபெற்ற நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன்; போர்ப்படையில் முன் நிற்பவர் பயப்படக் கூடாது; நான் நிற்பேன்; என் மூக்கை உடை, மருந்து போட்டுக் கொண்டு திரும்ப வந்து நிற்பேன்; கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட பூத்துக்கு 20 பேர் வீதம் மொத்தம் 40,000 பேர் தேவை. 40 ஆயிரம் பேரால் 19 லட்சத்து 38 ஆயிரம் பேரை சென்று சேர முடியாதா?. மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் கோவை தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளேன்.

‘விக்ரம்’ படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?. இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம் இவ்வாறு கூறினார்.


மக்கள் கருத்து

INDIANSep 22, 2023 - 04:04:05 PM | Posted IP 172.7*****

நீங்கள் அமெரிக்காவில் அதிபருக்கு போட்டி போடலாம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory