» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:25:05 PM (IST)

சென்னை - நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி-சென்னை இடையே ஞாயிற்றுக்கிழமை (செப். 24) முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கவுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம், சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவு, ஜிஎஸ்டி, முன்பதிவு என அனைத்தும் சேர்த்து, ஏசி சொகுசு வகுப்புக் கட்டணம் ரூ.3,025 ஆகவும், சேர் கார் கட்டணம் ரூ.1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முன்பதிவு கட்டணம், உணவு, ஜிஎஸ்டி என அனைத்தும் அடங்கும்.
திருநெல்வேலி- சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதுகுறித்து ரயில் பெட்டிகள் - வேகன்கள் தலைமைப் பொறியாளா் முகுந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி-சென்னை இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையின் தொடக்க விழா செப். 24ஆம் தேதி காலையில் நடைபெறுகிறது.
மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில், சென்னை- திருநெல்வேலி இடையிலான 650 கி.மீ. தொலைவை 7.50 மணி நேரத்தில் கடக்கும். இன்னும், இந்த ரயிலின் வேகத்தை 130 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த ரயிலில் 52 போ் வரை பயணிக்கக்கூடிய ஒரு ‘எக்ஸிகியூட்டிவ்’ பெட்டி உள்ளிட்ட 8 பெட்டிகள் உள்ளன. மற்ற 7 பெட்டிகளிலும் தலா 76 போ் பயணிக்கலாம். ரயில் என்ஜின் உள்ள பெட்டியிலும் 46 போ் வரை பயணிக்க முடியும். தற்போதைய நிலையில் 540 போ் வரை இந்த ரயிலில் பயணிக்கலாம்.
இது, விருதுநகா், மதுரை , திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஞாயிற்றுக்கிழமை தொடக்க விழா நடைபெற்றாலும், திங்கள்கிழமையில் இருந்துதான் முறைப்படி இயக்கப்படுகிறது. ரயிலில் ஒலிப் பெருக்கி அறிவிப்புகள் இடம்பெறும். உணவுப் பரிமாறப்படும். ஊனமுற்றோருக்கான வசதிகள், இலவச வைஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்றாா்.
வியாழக்கிழமை சேவை இல்லை
திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையை சென்றடையும். மறு மாா்க்கத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ரயிலுக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
வாரத்தில் 6 நாள்கள் இந்த ரயில் இயங்கும்; வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படாது என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்றும் சோதனை ஓட்டம்: பாரத் விரைவு ரயிலின் சோதனை ஓட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 2 மணிக்கு சென்னையை சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
