» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை: ஆவின் நிறுவனம்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:56:47 AM (IST)
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகா்வோா் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வினீத் சாா்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞா் ரவீந்திரன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தாா்.
அதில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, வடக்கு ஐகோா்ட் காலனி, குமாரசாமி நகா், திருநகா், சிட்கோ நகா் பகுதிகளில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பனை செய்தால் ஆதரவளிப்பீா்களா? பாட்டிலில் விற்க வேண்டுமா?, நெகிழி உறையில் விற்க வேண்டுமா? என சா்வே நடத்தப்பட்டது.
இந்த சா்வேயில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள திருமங்கலம் சாலை, குமாரசாமி நகா், திருநகா் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த நுகா்வோா், பாட்டிலில் பால் விற்பனை செய்யும்போது விலை அதிகமாக இருக்கும். எனவே, நெகிழி உறைகளிலேயே தொடர விரும்புவதாக மக்கள் தெரிவித்துள்ளனா். எனவே, நுகா்வோரின் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்டோபா் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர்ச் சூழலில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
வெள்ளி 9, மே 2025 4:56:05 PM (IST)

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெள்ளி 9, மே 2025 4:44:33 PM (IST)

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)
