» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் : பாஜக கோரிக்கை..!!

வியாழன் 21, செப்டம்பர் 2023 8:19:23 PM (IST)

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புதியதாக துவங்க இருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் இயக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மத்திய ரயில்வே அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை திருநெல்வேலி சென்னை இடையே வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சி வாய்ந்தது. 

அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வந்தே பாரத் ரயில் சேவையினால் தென் தமிழக ரயில் பயணிகளிடையே வரவேற்பு உள்ளது. திருநெல்வேலி அருகே உள்ள திருச்செந்தூரில் உலக பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் திருவைகுண்டம் சுற்று வட்டாரத்தில் நவ திருப்பதி,நவ கைலாய ஸ்தலங்களுக்கு வரும் பக்தர்கள் வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை செல்ல இணைப்பு ரயில் திருச்செந்தூரில் புறப்பட்டு திருநெல்வேலியில் காலை 05.30 மணிக்கு சென்றடைவதற்கு வசதியாக ஒரு பயணிகள் ரயிலும் அமைத்து கொடுக்க வேண்டும்.

அதேபோல் சென்னையில் இருந்து மறு மார்க்கமாக மாலை 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடையும் வந்தே பாரத் ரயிலில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரத்தில் பேருந்து வசதி இன்றி அவதிக்குள்ளாவார்கள் ஆகவே இரவு 11.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்ல பயணிகள் ரயிலும் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

PREMKUMARSep 22, 2023 - 09:23:21 AM | Posted IP 172.7*****

NO NEED TO ASK LINK TRAIN, DEMAND AND NEED OF THE TIME FOR THOOTHUKUDI TO CHENNAI VANDE BHARAT, AS WELL AS ,PREVIOUSLY STOPPED TRAIN ALSO REASTART.MS TO TN. CBE TO TN.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory