» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற தமிழக ராணுவ வீரரால் பரபரப்பு!

புதன் 20, செப்டம்பர் 2023 11:40:45 AM (IST)

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை நடுவானில் திறக்க முயற்சித்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்திலிருந்து நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் செங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று அவசரகால கதவை மணிகண்டன் திறக்க முயற்சித்துள்ளார்.

இதனை கண்ட பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மணிகண்டனை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானி அளித்த புகாரை தொடர்ந்து, மணிகண்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory