» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சனி 3, ஜூன் 2023 12:12:32 PM (IST)ரயில் விபத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்து களப்பணி ஆற்றுவர்.மூன்று ரயில்கள் மோதி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்வதற்கும், மீட்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். 

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory