» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாளை. அருகே பரோலில் வந்தஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

சனி 3, ஜூன் 2023 8:12:58 AM (IST)

பாளையங்கோட்டை அருகே பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

பாளை. அருகே கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பன் (55). இவா் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் மகளுக்கான திருமண ஏற்பாடு நடந்து வந்துள்ளது. அதற்காக அவா் பரோலில் வெளியே வந்தவா், இன்று சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு செல்ல இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory