» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கருப்பு கண்ணாடி... தலையில் தொப்பி.. முழுசா எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி பழனிசாமி!
செவ்வாய் 28, மார்ச் 2023 4:53:47 PM (IST)

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் (கண்ணாடி) அணிந்து எம்ஜிஆர் போல காட்சி அளித்தார்.
அதிமுக வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தேர்தல் ஆணையர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபின் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் (கண்ணாடி) ஒன்றை வழங்கினார். அதை எடப்பாடி பழனிசாமி வாங்கி அணிந்து கொண்டு எம்.ஜி.ஆர் தோற்றத்தில் காட்சி அளித்தார். இதைப்பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். தொப்பி மற்றும் கூலிங் கிளாஸை எடப்பாடி பழனிசாமி சிறிது நேரம் அணிந்திருந்தார்
மக்கள் கருத்து
தொண்டன்Mar 28, 2023 - 08:30:36 PM | Posted IP 162.1*****
இனி அண்ணா தி மு க ராணுவ கட்டுப்பாட்டோடு செயல்படும்
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
செவ்வாய் 13, மே 2025 12:41:47 PM (IST)

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

NARTHAMar 29, 2023 - 03:00:41 PM | Posted IP 162.1*****