» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்ட நலன் வேண்டி ஏப்.5ம் தேதி மேல்மருவத்தூரில் பங்குனி பௌர்ணமி விழா!
செவ்வாய் 28, மார்ச் 2023 2:52:03 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட நலன் வேண்டி மேல்மருவத்தூரில் ஏப்ரல் 5ம் தேதி பங்குனி பௌர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது.

சித்தர் பீடம் வருகைதரும் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் நலன் வேண்டி மகளிர் கலந்து கொள்ளும் மாபெரும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. விளக்கு பூஜையை ஆன்மிக இயக்க தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் தீபம் ஏற்றி தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து வெள்ளித்தேர், தங்கத்தேரை தூத்துக்குடி பக்தர்கள் இழுக்கின்றனர். காலை 6 மணியிலிருந்து இரவு 8மணி வரை சித்தர் பீடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் வழிபாட்டு மன்றங்கள், சக்திபீட நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலத்தில் 97.39 சதவீதம் தேர்ச்சி!
செவ்வாய் 13, மே 2025 12:28:32 PM (IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 13, மே 2025 11:03:28 AM (IST)

தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மிக மோசம்: சிபிஎம் நிர்வாகி உ.வாசுகி பேட்டி!
செவ்வாய் 13, மே 2025 10:48:07 AM (IST)

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)
