» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சூறாவளி காற்றில் 5ஆயிரம் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

செவ்வாய் 28, மார்ச் 2023 11:43:40 AM (IST)

பேய்க்குளம் பகுதியில் சூறாவளி காற்றில் 5000க்கு மேற்பட்ட வாழைகள் சேதமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் கடந்த 23ஆம்தேதி பெரும் சூறாவளி காற்று வீசியதில் மீரான்குளம், கோமானேரி. கட்டாரிமங்கலம், கருங்கடல், ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் காற்றில் சரிந்து சேதமானது. அப்பகுதியில் சுமார் 5000க்கு மேற்பட்ட வாழைகள் சரிந்து விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மரங்களும் சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

ஆதலால் விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ, ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் , சென்னை தலைமை செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். இதனைபோல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிக்கும் நடவடிக்கை எடுக்க கோரி மனு அனுப்பியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory